2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டை, 2022 ஆம் ஆண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் 3.1%

வீழ்ச்சியடைந்துள்ளதாக  மக்கள்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,683,374 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், இது இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 2,597,441 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் விவசாய நடவடிக்கைகள் 3.6 சதவீதத்தால் விரிவடைந்த அதேவேளை கைத்தொழில் மற்றும் சேவை நடவடிக்கைகள் முறையே 11.5 சதவீதமாகவும் 0.8 சதவீதமாகவும் வீழ்ச்சியுற்றுள்ளதாக மக்கள்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி