ஐக்கிய தேசிய கட்சியை பிளவு படச்செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இவ்வேளையில் சமூகத்திற்கு தெரியாத மேடைகளில் பிரச்சாரங்கள் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர் வரும் பொதுதேர்தலில் ஐ.தே. கட்சியை இரண்டாக பிளவுபடச்செய்ய  முயற்சிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த ராஜபக்ச அரசாங்கம் 100 நாட்களுக்குள் மக்களில் கடுமையான விரோதத்தை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் அப்படி வாக்களிக்கப்பட்ட ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை இச்சந்தர்பத்தில் ஐ.தே.கட்சியினராகிய நாம் ஒற்றுமையுடன் செயற்பட்டு அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பை காட்டி மக்கள் நலனை காக்க வேண்டும் என்றார்.

ஐக்கிய தேசியக்கட்சி யாரினதும் தனிச்சொத்தல்ல நாடு பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ராஜபக்ச குடும்பம் ஐ.தே.க இரண்டாக பிளவுபடச்செய்ய முயற்சிப்பாதக கூறும் மங்கள சமரவீர புதிய கூட்டணியில் தேர்தலில் ஈடுபடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக தெரிவித்தார்.

ஐ.தே. கட்சி தனிப்பட்ட நபரினதோ குழுவினதோ கட்சியல்ல இதனடிப்படையில் நாம் ஜனநாயகப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் இப்படியான தனிநபர்,குழுவை ஓரங்கட்ட வேண்டும் என்றும் கூறினார்.   

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி