தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் (2015-2019) தேசிய வீடமைப்பு

அபிவிருத்தி அதிகார சபையில் சுமார் 2100 ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே நேற்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த ஊழியர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் தாம் பிரதிநிதித்துவப்படுத்திய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் எனவும் இது சட்டவிரோதமானது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் (ஸ்ரீ.பொ.பெ) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே நேற்று (5) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. அங்கு தொடர்ந்து பேசிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே,

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இந்த ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இவ்வாறு தொடர்ந்து ஆட்சேர்ப்புக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வருடாந்தம் 1537 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவர்களுக்கு வேலை செய்வதற்கு மேசை அல்லது நாற்காலி இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த ஊழியர்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போதும் அவர்கள் அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் அலுவலகங்களில் பணியாற்றியதாக அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி