நபர் ஒருவரை கடத்தி சமையல் எரிவாயு சிலிண்டரை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

செய்யப்பட்டுள்ளனர்.

கெப் வண்டியில் வந்த சிலர் கடையொன்றில் இருந்த நபரை கடத்திச் சென்று சமையல் எரிவாயு சிலிண்டரை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வண்டி மற்றும் கொள்ளையிடப்பட்ட எரிவாயு சிலிண்டருடன் சந்தேகநபர்கள் ஐவர் நேற்று (03) கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட நபரும் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22, 23, 24, 31 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தகராறு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், கடத்தப்பட்ட நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இன்று (04) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி