மாளிகாவத்தை செவன மாவத்தையில் இன்று (01) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று திறக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்தில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் அதன் உரிமையாளரான மாளிகாவத்தை பிரதீப் காயமடைந்து தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் திட்டமிட்ட குற்றவாளியான பஞ்சிகாவத்தை நெவிலின் உறவினர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்தை திறக்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெசல்வத்தை தினுகவின் தரப்பினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கைத்துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்