"இந்தியாவினால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலத்தின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப விருத்தி பணிகளில் இந்திய

பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு அளப்பரியது. இதன் கொண்டாட்ட நிகழ்வில் சேலை அணிந்து அந்தப் பெண் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டிருப்பதை வலைத்தளங்கள் காட்சிப்படுத்தி இருந்தன.

"இலங்கை உழைக்கும் வர்க்கத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகபட்சத்தில் காணப்படுகிறது. ஆடை தொழிற்சாலை, தேயிலைத் தொழில்துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, ஆசிரியர் தொழிற்துறை, மருத்துவத்துறை என பெண்களின் பங்களிப்பு அதிக அளவிலேயே காணப்படுகிறது.

"சில சந்தர்ப்பங்களில் மங்கல தெரிவிப்பாராம் இந்த வேலைகள் அனைத்தையும் பெண்களைக் கொண்டே செய்வோம் என்று. அதாவது, ஆண்களுக்கு சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ பயனுள்ள விதத்தில் காரியங்களை நிறைவேற்றுவதில் பெண்கள் திறமை மிக்கவர் என்பதே மங்களவின் கருத்தாக இருந்தது. அது மிகவும் நவீனத்துவமிக்க எண்ணப்பாடாகும்.

"தற்காலத்தில் பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் மாணவர்களுள் பெண்களை அதிகமாக காணப்படுகின்றனர். அவர்கள் கல்வியில் ஆர்வமாக இருக்கின்றார்கள். முன்னேறிச் செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கான சுதந்திரத்தை நாம் வழங்கினால், சரியான வழியை காண்பித்தால், சமூகரீதியான சுதந்திரம் கிடைத்தால், அவர்கள் எம்மை சந்திரனுக்கே அழைத்துச் செல்வார்கள் என்ற மங்களவின் எண்ணப்பாட்டையே இந்த பூமி நம்புகிறது. அவளை நம்புங்கள் என்பதே அந்த எண்ணப்பாடாகும்." இந்த கருத்துக்களை மங்களமின் விடாமுயற்சி எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்துரைத்த கலாநிதி மகேஷ் அப்புகோட தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது,

"இந்த காலகட்டத்தில் மங்கள போன்ற ஒரு ஒருவர் இலங்கை அரசியலில் இல்லாதிருப்பது பெரும் குறையாகவே காணப்படுகிறது. விசேடமாக ஒன்றோடு ஒன்று பொருந்தாத அரசியல் குழுக்களை அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் மாபெரும் திறமை மங்களவிடம் காணப்பட்டது.
எவ்வாறான அரசியல் சூழ்நிலையிலும் அவர்களுடன் கலந்துரையாடக்கூடிய கருத்துக்களை பரிமாறக்கூடிய திறமை அவரிடமிருந்து.

"இலங்கைக்கு தேவை போராளிகள் மாத்திரம் அல்ல கலந்துரையாடல் ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் தொலைதூரத்தில் இருப்பவர்களை அருகில் கொண்டு வரக்கூடிய ஒருங்கிணைப்பாளர்களே தேவைப்படுகிறார்கள். மங்கள அந்தப் பணியை சரியாக செய்தார்" என்று கலாநிதி மகேஷ் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி