போலி விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய பிரபல சிகையலங்கார நிபுணர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஐக்கிய அரபு இராச்சியம் ஊடாக கனடா செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் பல சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

நேற்று (23) பிற்பகல் குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான அனுமதிப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன், அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கரும பீடத்தில் வழங்கிய கனேடிய விசா தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அங்கு சந்தேக நபரை குடிவரவு எல்லை அமுலாக்க பிரிவு அதிகாரிகளிடம் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணையில் சந்தேகநபர் வழங்கிய விசா போலியானது என தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​45 இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து, தரகர் ஒருவரிடமிருந்து போலி அனுமதிப்பத்திரம் பெறப்பட்டதாக தெரிவித்தார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி