யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை
மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்து கொலை செய்யப்படுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
09 வயதான சிறுமி ஒருவரிடம் சடலமாக மீட்கப்பட்ட நபர் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தே குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய் உள்ளிட்ட உறவினர்களே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் தாய் உள்ளிட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
உயிரிழந்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தினால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியிடமும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்கள் மற்றும் சிறுமியும் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் 6 பேரையும் எதிர்வரும் 24 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் குறித்த சிறுமியை தந்தையுடன் செல்ல நீதவான் அனுமதித்துள்ளார்.