Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சிகரெட், மதுபான பாவனையால் தினமும் 85 பேர் பலி!

T

The Leader Desk

செப்டம்பர் 1, 2020 • 1:22 AM

சிகரெட், மதுபான பாவனையால் தினமும் 85 பேர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஒவ்வொரு நாளும் 85 பேர் உயிரிழக்கின்றனர்.
  • மீதமுள்ள போதைப் பொருள் பாவனையாளர்களை கணக்கிட்டால் சுமார் 80-100 பேரைக் பலியெடுக்கும் ஒரு பெரிய தொற்று நோய்ப் பற்றி நாங்கள் கலந்துரையாடுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கையில் சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டால், புகைபிடிப்பதை 80% முதல் 90% வரை நிறுத்த முடியுமென, புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர், கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவிக்கின்றார்.
  • "2019ஆம் ஆண்டில் மாத்திரம் 300 மில்லியன் போத்தல்கள் சேர்க்கப்பட்டன.
எழுத்து அளவு:

மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஒவ்வொரு நாளும் 85 பேர் உயிரிழக்கின்றனர். மீதமுள்ள போதைப் பொருள் பாவனையாளர்களை கணக்கிட்டால் சுமார் 80-100 பேரைக் பலியெடுக்கும் ஒரு பெரிய தொற்று நோய்ப் பற்றி நாங்கள் கலந்துரையாடுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டால், புகைபிடிப்பதை 80% முதல் 90% வரை நிறுத்த முடியுமென, புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர், கலாநிதி  சமாதி ராஜபக்ச தெரிவிக்கின்றார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

”கால் போத்தல்” நடைமுறை ஊடாகவே இலங்கை மக்கள் அதிக அளவில் மது அருந்துவதாக தெரிவிக்கும் சமாதி ராஜபக்ச, அதனை ஒழிப்பதற்கான ஆணையிடும் சட்ட மசோதாக்களைக் கொண்டுவருவதற்கான விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"2019ஆம் ஆண்டில் மாத்திரம் 300 மில்லியன் போத்தல்கள் சேர்க்கப்பட்டன. கண்ணாடி போத்தல்களை அப்படிச் சேர்க்கும்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு டெங்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய வருடங்களில் மாத்திரம் 160-190 மில்லியன் வெற்று பியர் கேன்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலும் பணியிடத்திலும் பெண்களுக்கு தீங்கு

22% இலங்கை பெண்கள் தங்கள் சொந்த வீடுகளில் புகைபிடிப்பாளர்களால் பாதிக்கப்படுவது ஒரு சோகம் எனக் குறிப்பிட்டுள்ள கலாநிதி சமாதி ராஜபக்ச,  இலங்கையில்  11% பெண்கள் பணியிடத்தில் புகைபிடிப்பாளர்களால் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

புகையிலையுடன் வெற்றிலையை உட்கொள்வதால் ஏற்படும் வாய்வழி புற்றுநோயால் இலங்கையில் தினமும் மூன்று பேர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஒரு பயிற்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய, மனநல விசேட வைத்தியர் அமில இசுரு, புகைபிடிப்பது மனநோய்க்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...