எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த வழக்கை
கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் ஜூலை மாதம் 26ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த இந்த வழக்கு இன்று (23) அழைக்கப்பட்ட போது மனுதாரர்கள் சாா்பில் முன்வைத்த சமா்ப்பணங்களை பரிசீலித்த நீதிமன்றம் மனுவை திருத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுப்பது குறித்து அடுத்த வழக்கு விசாரணையின் போது பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தால் மீனவர்கள், சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக சுமார் 07 பில்லியன் அமெரிக்க டொலர்களை அறவிடுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் பிரதிவாதிகளாக பெயாிடப்பட்டுள்ளன.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி