கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தொடா்பில் 3 மோசடி சம்பவங்கள் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள்
திணைக்களம் தொிவித்துள்ளது.

பிபில, வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் பரீட்சாத்தி ஒருவா் தமது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி காணித பாட வினாத்தாளினை வட்சப் ஊடாக ஆசிாியா் ஒருவருக்கு அனுப்பி விடைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், ஹேனேகம மஹா வித்தியாலயம் மற்றும் சீதுவ பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையங்களிலும் முறைகேடுகள் பதிவாகியுள்ளன.

இரண்டு பரீட்சாத்திகள் தமது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி கணித பாட வினாத்தாள்களை தனித்தனியாக ஆசிாியா்களுக்கு அனுப்பி விடைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது பரீட்சை கண்காணிப்பாளரால் அந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடா்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளா் லசிக சமரகோன் தொிவித்துள்ளாா்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி