பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று (20) ஜீப் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே

உயிரிழந்தார்.

இன்று (20) காலை இந்த விபத்து குருநாகல், உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

அந்த விபத்தில் குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சித்துமினி ராஜகுரு என்ற 17 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த போதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

வீதியில் பயணித்த ஜீப் ஒன்று, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகி, மாணவி மீது பாய்ந்து, தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றது.

சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி