Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் 8ஆம் வகுப்பு படித்தவர் செய்த சிசேரியன் அறுவை சிகிச்சை FAIL!

T

The Leader Desk

மார்ச் 21, 2021 • 11:41 AM

உத்தரப் பிரதேசத்தில் 8ஆம் வகுப்பு படித்தவர் செய்த சிசேரியன் அறுவை சிகிச்சை FAIL!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உள்ளூர் ஊடகங்களின் செய்தியின்படி, சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள பால்திராய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சைனி எனும் கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது.
  • அங்குள்ள ஓர் அனுமதி பெறாத மருத்துவமனையில் 35 வயதாகும் பூனம் எனும் பெண்மணி கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • ராஜேந்திர குமார் சுக்லா எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்றும் அவர் பணியாற்றி வந்த மருத்துவமனையை நடத்தி வந்த ராஜேஷ் குமார் சாஹ்னி என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளவர் என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

உள்ளூர் ஊடகங்களின் செய்தியின்படி, சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள பால்திராய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சைனி எனும் கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள ஓர் அனுமதி பெறாத மருத்துவமனையில் 35 வயதாகும் பூனம் எனும் பெண்மணி கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு ராஜேந்திர குமார் சுக்லா என்பவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பூனம் மற்றும் அவரது குழந்தை இருவருமே இறந்து விட்டனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

குழந்தைகளில் யாருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகம் - சுகப்பிரசவம் (அ) சிசேரியனா?

குங்குமப்பூ கலந்த பால் குடித்தால் சிவப்பான குழந்தை பிறக்குமா?

ராஜேந்திர குமார் சுக்லா எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்றும் அவர் பணியாற்றி வந்த மருத்துவமனையை நடத்தி வந்த ராஜேஷ் குமார் சாஹ்னி என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளவர் என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருடன், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மருத்துவ உதவியாளர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Mother, New Born Baby Bleed to Death After School Dropout Performs C-Section With Razor Blade

உயிரிழந்த பூனமின் கணவர் ராஜாராம் அளித்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூனமுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதற்கு ராஜேந்திர குமார் முகச் சவரம் செய்ய பயன்படுத்தப்படும் ப்ளேடை பயன்படுத்தியதாகவும் அறுவை சிகிச்சை நடந்த சில நிமிடங்களிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜேஷ் குமார் சாஹ்னி நடத்திவரும் 'மா சாரதா' மருத்துவமனையில் கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்யும் பணிக்காக ராஜேந்திர குமார் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜேஷ் குமார் சாஹ்னியின் பதிவு செய்யப்படாத இந்த மருத்துவமனை போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவ ஊழியர்களைக் கொண்டு இயங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதியின்றி இயங்கிவரும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...