Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சர்வதேச உப்பு வாரம் மார்ச் 8 - 14 வரை! உப்பு பாவனையைக் குறைத்தால் 2.5 மில்லியன் மரணங்களை தவிர்க்கலாம்

T

The Leader Desk

மார்ச் 9, 2021 • 5:59 AM

சர்வதேச உப்பு வாரம் மார்ச் 8 - 14 வரை! உப்பு பாவனையைக் குறைத்தால் 2.5 மில்லியன் மரணங்களை தவிர்க்கலாம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையைப் பொறுத்தவரையில் உப்பு பாவனை தொடர்பாக முறையான கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், இலங்கையில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோயால் ஏற்படுகின்றன.
  • அவற்றில் 34 வீதமானவை இருதய மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களினால் ஏற்படுகின்றன.
  • இவற்றுள் மிகவும் அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், அதி உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணம், அதிகமாக உணவில் உப்பை பயன் பயன்படுத்துவதாகும்.
எழுத்து அளவு:

இலங்கையைப் பொறுத்தவரையில் உப்பு பாவனை தொடர்பாக முறையான கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோயால் ஏற்படுகின்றன. அவற்றில் 34 வீதமானவை இருதய மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களினால் ஏற்படுகின்றன. அதாவது, இந்த மரணங்கள் இருதயநோய், பக்கவாதம், அதி உயர் குருதி அழுத்தம் போன்றவற்றினால் இடம்பெறுகின்றன.

இவற்றுள் மிகவும் அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், அதி உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணம், அதிகமாக உணவில் உப்பை பயன் பயன்படுத்துவதாகும். ஒருவர் நாளொன்றிற்கு எடுக்க வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி அளவு) என்பதாக உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இலங்கையில் ஒருவர் நாளொன்றிற்கு 9 கிராம் தொடக்கம் 12 கிராம் வரையிலான அதிகளவான உப்பை பயன்படுத்துகின்றனர்.

விசேடமாக உப்பு பாவனையைக் குறைப்பதனால் ஒரு ஆண்டில் உலகில் ஏற்படுகின்ற மரணங்களில், 2.5 மில்லியன் மரணங்களை குறைக்கலாம் என்றும் இந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சர்வதேச உப்பு வாரம் மார்ச் 8 - 14 வரை! உப்பு பாவனையைக் குறைத்தால் 2.5 மில்லியன் மரணங்களை தவிர்க்கலாம் | Tamil Leader | We Lead the Nation