வயல்வெளியில் பெண் மற்றும் ஆண் ஒருவர் தாக்கப்பட்டதில் ஆண் உயிரிழந்துள்ளதுடன், பெண் படுகாயமடைந்துள்ளார்.நெற்காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கியதையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளதுடன், 65 வயதுடைய மனைவி காயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த ஆண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெலபதுகம பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று (19) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்