Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

78 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று!

T

The Leader Desk

அக்டோபர் 31, 2020 • 3:17 PM

78 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும் 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
  • அதனையடுத்து, 40 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் செயற்பாடுகளை பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • ஹொரணை ஆடைத் தொழிற்சாலையொன்றின் பெண் ஒருவருக்கும் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் அந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • பயண வரையறை விதிக்கப்பட்டுள்ள குருநாகல் – மல்லவபிடிய, வில்கொட பிரதேசத்தில் கொரோனா நோயாளர்களுடன் நெருங்கி செயற்பட்ட 200 பேருக்கு இன்று PCR பரிசேதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மேலும் 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவருக்கும் வெகுஜன ஊடக அமைச்சின் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் உதவி பணிப்பாளர், அபிவிருத்தி அதிகாரியொருவர் மற்றும் இரண்டு அலுவலக உதவியாளர்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.

அதனையடுத்து, 40 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் செயற்பாடுகளை பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹொரணை ஆடைத் தொழிற்சாலையொன்றின் பெண் ஒருவருக்கும் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் அந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திடீரென மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பயண வரையறை விதிக்கப்பட்டுள்ள குருநாகல் – மல்லவபிடிய, வில்கொட பிரதேசத்தில் கொரோனா நோயாளர்களுடன் நெருங்கி செயற்பட்ட 200 பேருக்கு இன்று PCR பரிசேதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் அங்கு 16 COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலமையில் சிலாபம் மீன் சந்தையை அண்மித்த பகுதியிலும் வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் மீன் சந்தை அண்மையில் மூடப்பட்டதுடன், பின்னர் மீனவர்கள் மீன் சந்தையை அண்மித்த பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

முடக்கப்பட்டிருந்த ஹட்டன் நகரம், சில கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்பட்டது.

நகரில் இன்று கடைகள் திறக்கப்பட்டிருந்ததுடன், ஹட்டனின் முதலாவது COVID-19 நோயாளி அடையாளம் காணப்பட்ட, ஹட்டன் சந்தை தொகுதியை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இன்று முற்பகல் அங்கு சில கடைகள் திறக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அவற்றை மூடுவதற்கு பொதுசுகாதா பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

கேகாலை – புலத்கொஹூபிட்டியவில் 11 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால், புலத்கொஹூபிட்டிய, லவல, அம்பமல்ல, பன்னல கிராமங்களைச் நேர்ந்த 70 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...