அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தொழில்நுட்பக் கோளாறிற்கு உள்ளான ஸ்ரீலங்கன் விமானம் நாளை (17ஆம் திகதி) காலை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்திற்குச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 06 பொறியியலாளர்கள் விமானத்தை சீர்செய்து மீட்டெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

அதன்படி, U.L-605 ரக விமானம் நாளை அதிகாலை 12.30 மணிக்கு இலங்கைக்கு புறப்பட உள்ளது.

அதில் மெல்பேர்னிலிருந்து சுமார் 300 இலங்கை விமானப் பயணிகள் இலங்கை வரவுள்ளனர்.

குறித்த விமானம் நாளை காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி