யாழ்ப்பாணத்தில் இருந்து முழங்காவில் பகுதியூடாக மன்னார் நோக்கி பயணித்த கார் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்

சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (13) இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றது.

இதன் போது நவாலி மானிப்பாயை சேர்ந்த செல்வ மகேந்திரன் கமலரூபன் (வயது-36 ) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு
யாழில் இருந்து மன்னார் நோக்கி நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் பயணித்த சமயம் முழங்காவில் பகுதியில் காவல்துறையினரின் வீதிச் சோதனைக்காக வழி மறித்தும் நிறுத்தாமல் சென்ற போது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் மன்னார் முருங்கன் வரை பயணித்துள்ளார். பின் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்