புத்தாண்டை முன்னிட்டு நாளையும் (13) நாளை மறுதினமும் (14) நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும்

மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் ஊடாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் தயாரிப்பு தொடர்பில் தகவல் வழங்க முடியும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்