ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கும் ஜனாதிபதி தோ்தல் பிரசாரக் கூட்டத்தின் போது “ஹூ” கோஷம்

போடப்பட்டுள்ளது. அலவ்வ பிரதேசத்தில் மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தின் போதே இவ்வாறு சாந்த பண்டாரவுக்கு ஹூ கோஷம் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மொட்டு மேடையில் ஏறும் ஸ்ரீ.ல.சு.கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹூ கோஷம் போடப்படுவது, மொட்டு கட்சியுடன் இணைந்துள்ள எந்த ஒரு ஸ்ரீ.ல.சு.கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஹூ கோஷம் போடக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தமது கட்சி ஆதரவாளர்களிடத்தில் பல சந்தர்ப்பங்களிலும் அறிவுறுத்தியிருந்த போதேயாகும்.

இதேவேளை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போது அங்கு கூடியிருந்த மது போதையிலிருந்தவர்கள் கூக்குரலிட்டுள்ளதோடு அதனையடுத்து அவரும் தனது உரையினை முடித்துக் கொண்டதோடு, இதன் பின்னர் மாலையில் பிரசாரக் கூட்டங்களை நடாத்துவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  இனிமேல் காலை வேளையிலேயே பிரசாரக் கூட்டங்களை நடாத்துவதாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி