பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் இன்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக

பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை வடக்கில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நண்பர்கள் குழுவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதுடன், பாணந்துறை பின்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி