பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவிலில் வைத்து

தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிராமக விசாரணை நடந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. இவர் குழித்துறை தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்பேற்றார்.

இதனிடையே, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ மட்டுமின்றி பெண்களுடன் புகைப்படம், ஆபாச சாட்டிங் என பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய பெனடிக்ட் ஆன்றோ மீது, அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் அவர் தலைமறைவானார். பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி, நாகர்கோவில் சைபர் க்ரைம் பொலிஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர் கேரளா அல்லது பெங்களுரூவில் பதுங்கி இருக்கலாம் என கூறப்பட்டு வந்தநிலையில் தனிப்படையினர் அங்கு ரகசியமாக சென்று கண்காணித்தனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் செல்போன் எண் மற்றும் சிக்னல் மூலம் அவரை பொலிஸார் தேடி வந்தனர்.

மேலும் அவரால் பாதிக்கப்பட்டோர், சைபர் க்ரைம் பொலிஸில் புகார் கொடுக்கலாம் என்றும் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம் என்றும் புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் உள்ள பால் பண்ணை பகுதியில் தனிப்படை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி