பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ´பூரு மூனா´

எனப்படும் ரவிந்து சங்கட சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத்தில் உணவகம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி, சந்தேகநபர் வெளிநாடு செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட போது, ​​சந்தேக நபர் இரு தேரர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி