புலிகளின் தலைவர் பிரபாகரன் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் கொலை செய்துள்ளமையால், அவர் தற்போது

நரகத்திலேயே இருப்பார் எனவும், பழ.நெடுமாறன் நரகத்துக்குச் சென்றே அவரை அழைத்து வர வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"பிரபாகரன் தற்போது நரகத்தில் உள்ளார். நரகத்திலிருந்து வருகைத் தருவதற்கு பல பிறவிகள் காத்திருக்க வேண்டும். பல இலட்சம் மக்களைக் கொலை செய்துள்ளமையால், அவர் தற்போது நரகத்திலேயே இருக்க வேண்டும். அப்படியென்றால், இவரும் நரகத்துக்குச் சென்றே அவரை மீண்டும் அழைத்து வர வேண்டும்" என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி