ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று

வெள்ளிக்கிழமை அவர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட தரப்புகளுடனான சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன. இதேவேளை நாளை யாழ். கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்விலும், சுதந்திர தின நிகழ்வு, இசை நிகழ்ச்சி என்பனவற்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்வுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர நாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தனது கொள்கை விளக்கவுரை முடிந்த பின்னர் இடம் பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதன்போதுஇ யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சுதந்திரநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் தனது யாழ்ப்பாணப் பயணத்தின்போது புத்திஜீவிகள் குழுவுடனும் சந்திப்பு நடத்தவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை - இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரகத்தின் இணைந்த எற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பின்னடைவினை கொண்டுள்ள பெண் தலைமைத்தவமான குடும்பங்களின் 250 நபர்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கும் நிகழ்வு 09.02.2023 அன்று யாழ். பொது நூலகத்தில் யாழ் இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை பிரதம அதிதியாக கலந்துகொண்டு உலர்உணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் , இந்திய தூதர உயர்அதிகாரிகள்,பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் புகழ்பெற்றவர்களில் ஒருவரான டாக்டர் அப்ஜப்துல்கலாம் அவர்களுக்கு யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள இந்தியா கார்னரில் இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், மலர்மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி