சீனாவுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கிட்டத்தட்ட 500 ஏக்கர் காணிகளை தனது கடன்களை சீர்செய்வதற்கு இரணைமடுவிற்கு தெற்குப் புறமாக சீனாவிற்கு வழங்குவதற்கான முழு முயற்சியையும் இலங்கை அரசு எடுத்திருப்பதாக அறிகின்றேன்.
இரணைமடுவின் தெற்கு புறமாகவும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையாக உள்ள இயக்கச்சி பகுதியில் மண்டலாய் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருக்கின்ற கிட்டத்தட்ட 200 ஏக்கருக்கு அதிக காணியையும் சீன நாட்டுக்கு வழங்குவதற்காக அவர்கள் சில திட்டங்களை முன்னெடுத்திருப்பது அவர்களின் செயற்பாடுகளிலும், நடவடிக்கைகளிலும் தெரியவந்துள்ளது.
ஈழத்தமிழர்களின் இருப்பு
இலங்கையில் பல நிலப்பகுதிகள் இவ்வாறு நாடுகளிற்கு விற்கப்படுகின்றன. அதில் கூடுதலாக கடலை தரையாக்கி சீனாவிற்கு விற்றல், கடலோரங்கள் மற்றம் தரைகளை சீனாவிற்கு விற்கும் செயற்பாடுகளில் அரசு இறங்கியுள்ளது.
இந்தியாவிற்கு தான் நல்லபிள்ளை போன்று நடித்துக்கொண்டாலும், தன்னுடைய வேலைத்திட்டங்களை சீனாவை வைத்தே கையாளுகின்ற பெரும் யுத்திகளை இலங்கை அரசு கையாளுகின்றது.
இது பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையிலும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஈழத்தமிழர்களின் இருப்பு என்பதும் பெரிய அளவிலே பாதிப்புக்குள்ளாகும் நிலை இருக்கின்றது.
இரணைமடுகுளத்தின் தெற்கு பகுதியில் 500 எக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதும், இயக்கச்சி பகுதியை அண்மித்து 200 ஏக்கர் காணியை சீன அரசுக்கு வழங்கு வதற்கு இலங்கை அரசு எடுத்திருக் கின்ற முயற்சி மிகவும் அபாயகரமானது.
கிடைத்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் இரணைமடுவின் தெற்கு பகுதிக்கு மகாவலி திட்டத்தை கொண்டு வருதல், சிங்கள குடியேற்றங்களை கொண்டுவருதல் என்ற போர்வையில் பாரிய வேலைத்திட்டங்களிற்காகவும், நீண்டகால அடிப்படையில் தமிழ் மக்களுடைய இனத் தனித்துவத்தை இல்லாது செய்து ஓர் சிங்கள மயப்படுத்துலாது செயற்பாடுகளில் அவர்கள் முன்னின்று உழைக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்..
வடக்கில் 700 ஏக்கர் சீனாவுக்கு..!
T
The Leader Desk
ஏப்ரல் 14, 2023 • 8:32 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சீனாவுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
- மேலும் தெரிவிக்கையில், கிட்டத்தட்ட 500 ஏக்கர் காணிகளை தனது கடன்களை சீர்செய்வதற்கு இரணைமடுவிற்கு தெற்குப் புறமாக சீனாவிற்கு வழங்குவதற்கான முழு முயற்சியையும் இலங்கை அரசு எடுத்திருப்பதாக அறிகின்றேன்.
- அதில் கூடுதலாக கடலை தரையாக்கி சீனாவிற்கு விற்றல், கடலோரங்கள் மற்றம் தரைகளை சீனாவிற்கு விற்கும் செயற்பாடுகளில் அரசு இறங்கியுள்ளது.
- இரணைமடுகுளத்தின் தெற்கு பகுதியில் 500 எக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதும், இயக்கச்சி பகுதியை அண்மித்து 200 ஏக்கர் காணியை சீன அரசுக்கு வழங்கு வதற்கு இலங்கை அரசு எடுத்திருக் கின்ற முயற்சி மிகவும் அபாயகரமானது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

