Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபாய் நாள் சம்பளம்!

T

The Leader Desk

டிசம்பர் 26, 2020 • 9:50 AM

தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபாய் நாள் சம்பளம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி நாள் சம்பள முறைக்கேற்ப தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 1025 ரூபாய் வழங்கப்படவிருப்பதாகவும் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அதற்கேற்ப அடிப்படை சம்பளமாக 700 ரூபாயும், EPF/ETF வழங்குவதற்கா 105 ரூபாயும், வருகைக்கான கொபடுப்பணவாக 70 ரூபாயும்.
  • உற்பத்திக் கொடுப்பணவாக 75 ரூபாயும் பறிக்கப்படும் மேலதிக கொழுந்துக்கான கொடுப்பணவாக 75 ரூபாயும் என்ற வகையில் நாள் சம்பளம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
  • ஆனால் தோட்டத் தொழிலாளிகள் 1000 ரூபாய் நாள் சம்பளம் வழங்குமாறு 2014 லிலிருந்தே கோரி வருகின்றனர்.
எழுத்து அளவு:

அதன்படி நாள் சம்பள முறைக்கேற்ப தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 1025 ரூபாய் வழங்கப்படவிருப்பதாகவும் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப அடிப்படை சம்பளமாக 700 ரூபாயும், EPF/ETF வழங்குவதற்கா 105 ரூபாயும், வருகைக்கான கொபடுப்பணவாக 70 ரூபாயும். உற்பத்திக் கொடுப்பணவாக 75 ரூபாயும் பறிக்கப்படும் மேலதிக கொழுந்துக்கான கொடுப்பணவாக 75 ரூபாயும் என்ற வகையில் நாள் சம்பளம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஆனால்  தோட்டத் தொழிலாளிகள் 1000 ரூபாய் நாள் சம்பளம் வழங்குமாறு  2014 லிலிருந்தே கோரி வருகின்றனர். கடைசியாக ஒப்பமிடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் வாயிலாகவும் இந்தக் கோரிக்கையை உதாசீனம் செய்து அடிப்படை சம்பளமாக 700 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டது. எனவே தோட்ட முதலாளிமாரின் இணக்கத்தில் புதிதாக எதுவுமே நடக்கவில்லை. தொழிலாளர்களுக்கு கிடைக்காத சில கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் தொங்க வைத்ததன் மூலம், 1000 தருவதாகக் கூறி தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இன்னொரு விடயம் என்னவென்றால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள EPF/ETF கொடுப்பணவு என்பது, தோட்டத் தொழிலாளர்களுக் கட்டாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமையேயன்றி தோட்ட நிறுவனங்களின் கருணையால் கிடைப்பதல்ல. அதனை சம்பளமாகக் கணக்கிடுவது அநீதியாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 க ஆக்குவதாக கடந்த வரவு செலவுத் திட்ட உரையின் போது மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்தார். ஆனால், 1000 நாள் சம்பளம் விடயத்தில் தம்மால் எதுவும் செய்ய முடியாதெனவும், தோட்ட நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டுமென இப்போது கூறப்படுகிறது. இந்த இரு தரப்பினரும் தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...