முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், அப்போது

அமைச்சர்கள் சிலரும் இதில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதனை மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமக்கு எதிராக சதித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதனால்தான் அவர் வெளியேற வேண்டியிருந்தது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொள்ளத் தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டு காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் அளவே தற்போதும் இறக்குமதி செய்யப்படுவதாகவும் ஆனால் தற்போது எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யார் நாட்டுக்கு சேவையாற்றினார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனநாயகம் மற்றும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுஜன பெரமுன மாறுப்பட்ட பொதுச் சின்னத்தில் போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே மக்களுக்கு மாற்று வழியேதும் கிடையாது எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி