கல்வியாண்டு 2023 இற்கான, அரச அச்சக கூட்டுத்தாபனம் மேற்கொள்ளும் பாடநூல் அச்சிடும் பணியில் தாமதம்

ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த புத்தகத் தேவையில் நாற்பத்தைந்து சதவீதத்தை அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்தியக் கடன் உதவித் திட்டத்தின் கீழ் காகிதம் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கும் வகையில், கூட்டுத்தாபனம் புத்தகங்களை அச்சடிக்கும் பணியை மேற்கொண்டது.

தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் தேவையான பொருட்கள் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கின்றது.

அடுத்த மாதத்திற்குள் பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்கள் தொடர்பான புத்தகங்களை முன்கூட்டியே அச்சிடுமாறு கூட்டுத்தாபனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீடு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அரச அச்சக கூட்டுத்தாபனம் எடுத்துள்ள அனைத்து புத்தகங்களையும் மார்ச் மாதத்திற்குள் அச்சிட முடியாது என பதிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மீதமுஉள்ள 55 சதவீதத்தை கையகப்படுத்திய தனியார் துறை நிறுவனங்கள் அச்சிடும் பணியை தொடங்கி, அடுத்த வாரம் முதல் புத்தகங்கள் துறையிடம் பெறப்பட உள்ளன.

புத்தகம் அச்சிடுவதற்கு இந்த ஆண்டு செலவிடப்பட்ட தொகை ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி