இலங்கை தொடருக்கு முன்னதாக இந்திய துடுப்பாட்ட அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள

கடிதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பங்காளதேச தொடரை வென்று அசத்திய இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் மோதவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன.

இலங்கை தொடர்

இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகளும் ஜனவரி 3, 5 மற்றும் 7ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. 3 ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12, 15ம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர் இந்த தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய தேர்வுக்குழு வராததால் சேட்டன் சர்மா தலைமையிலான பழைய தேர்வுக்குழுவே அணிக்கான வீரர்களை தெரிவு செய்ய உள்ளனர்.

அதன்படி ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் விளையாடுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

கோலி எடுத்துள்ள முடிவு

இந்நிலையில் விராட் கோலி எடுத்துள்ள முடிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இனி டி20 துடுப்பாட்ட போட்டிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும், 50 ஓவர் துடுப்பாட்ட போட்டிகளில் மற்றும் டெஸ்ட் துடுப்பாட்ட போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக கூறியிருக்கிறார்.

இதனால் இலங்கை டி20 தொடரில் கோலி நிச்சயம் ஆடப்போவதில்லை என தெரியவந்துள்ளது.

34 வயதாகும் விராட் கோலி டி20 உலகக்கோப்பைக்கு பின், டி20 துடுப்பாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் மற்ற வடிவ போட்டிகளில் மட்டுமே ஆட வைக்கவுள்ளதாகவும் பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் வெளியானது.

ஹர்திக் பாண்டியா தலைவராக

ஆனால் முக்கியமான போட்டிகளின் போது அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.

விராட் கோலியோடு சேர்த்து ரோகித் சர்மாவுக்கும் இதே நிலைமை தான் உள்ளது. 36 வயதாகும் அவர் முழு ஓய்வையே அறிவிப்பார் என தெரிகிறது.

மேலும் ஜனவரியில் வரவுள்ள இலங்கை தொடரின் முதலே ஹர்திக் பாண்டியா தலைவராக செயல்படுவார் என தகவல்கள் கசிந்துள்ளன. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி