சிம்பாப்வேவுக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த தூதுவராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மினோலி பெரேராவை அவுஸ்திரேலிய

அரசாங்கம் நியமித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுடன் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கான்பெராவில் நடத்திய ஊடக சந்திப்பின்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.

கொங்கோ, மலாவி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளுக்கும் மினோலி பெரேரா அவுஸ்திரேலியாவின் தூதராக பணியாற்றவுள்ளார்.

2018 முதல் ஹராரேவிலுள்ள அஸ்திரேலிய தூதகத்தின் உயர்மட்ட இராஜதந்திரியாக இவர் பணியாற்றிவந்துள்ளார்.

மினோலி பெரேரா, வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியாகவும், பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும், மிக அண்மையில் நிறைவேற்றுப் பிரிவின் முதல் உதவிச் செயலாளராகவும் பதவி வகித்தார்.

அவர் முன்னதாக பெய்ஜிங் போர்ட் மோர்ஸ்பி, நியூயோர்க், புவனஸ் அயர்ஸ் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலிய தூதுவராக நியமிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி