நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் 2018ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமையவே நடைபெறவுள்ளது. எனவே 2018 ஜூன் 01ம் திகதியாகும் போது 18 வயதைப்

பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகள் பெருமளவிலானோர்  இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் தமது முதலாவது வாக்கினை அளிக்கப் போகின்றார்கள்.

தமது வாக்குகளுக்கு பெறுமானம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து பார்த்த பின்னரே இந்த தேர்தலில் தமது முதலாவது வாக்கிளை வழங்கப் போவதாக சில இளைஞர் யுவதிகள் பீபீசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

இவ்விடயங்களினுள் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரத்தைப் பலப்படுத்தல், நாட்டினுள் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் உள்நாட்டு வளங்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விஷேட கவனத்தைச் செலுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனா்

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி