தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவுப் போராளியாகவும் அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றிய மறைந்த

தமிழினி ஜெயக்குமரனின் கணவரும் சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான மகாதேவன் ஜெயக்குமரன் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது.

அண்மைக் காலமாகச் சிறுநீரக நோய்ப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயக்குமரன், அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ (சுயசரிதை) ‘மழைக்கால இரவுகள்’ (கவிதைத் தொகுப்பு) ஆகிய நூல்களை தமிழினி ஜெயக்குமரனின் மறைவையடுத்து, யாழ். பல்கலைக்கழகப் பட்டதாரியான ஜெயக்குமரனே வெளியிட்டார்.

11416418_1160226757335192_4134219952170441349_o-225x300.jpg

Thamilini.JPG

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி