இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும்

வரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இணக்கப்பாட்டை எட்டுவதற்கு சகல மகாநாயக்க தேரர்களுடனும் கலந்துரையாட வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள இளங்கலை மாணவர்களை கடந்த 16ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.

மேலும், டிசெம்பர் 19ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தை மூட முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே. குறித்த பல்கலைக்கழகத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தலாவே தம்மிக்க தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தலாவே தம்மிக்க தேரர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி