பல்வேறு நபர்களின் பெயர்களை இழுத்துப் போட்டுக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில்

சிலர் மேற்கொண்டு வரும் பிரசாரங்களை முற்றாக நிராகரிப்பதாக அவரது தேர்தல் பிரசார பிரிவு தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாப ராஜபக்ஷவின்  இணை ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினரான டளஸ் அழகப்பெரும நேற்று (13) வெளியிட்ட  ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சாதமான நிலையினை ஏற்படுத்தும் நோக்கியலேயாகும் எனத் தெரிவிக்கப்டும் கூற்றினை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்த பெருமான் தொடர்பில் தவறான கருத்தினைத் தெரிவித்த “ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்” அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருப்பதாகவும் சிலர் செய்து வரும் பிரசாரத்தையும் வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த ஊடக அறிக்கை தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி