அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களை அனுப்புவது நிறுத்தப்படும்

என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக சர்வதேச தரத்திலான வீட்டு உதவியாளர்களை வேலைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (18) நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியுள்ளது.

வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்ற ஆண்டாக இந்த வருடம் பதிவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இன்றைய நிலவரப்படி 6,120 பேர் கொரியாவில் வேலைக்குச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியவர்களில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவைத்துக்கு சென்றுள்ளனர்.

அதாவது 76,579 பேர் கட்டாருக்கு, 69,992 பேரும், சவுதி அரேபியாவுக்கு 51,421 பேரும் சென்றுள்ளனர்.

மேலும், 4,410 தொழிலாளர்கள் ஜப்பானுக்குப் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி