இவ்வருட சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவியின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவி கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

கடந்த சனிக்கிழமை இரவு, பரீட்சை பெறுபேறுகளை தெரிவிப்பதற்காக உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது மற்றுமொரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபர் குறித்த மாணவி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, மாணவியின் தலைக்குக் கீழே உள்ள பகுதி தீக்காயங்களுக்கு உள்ளதான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிக போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி