எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளார்.

இதன்படி, நவம்பர் மாதத்தில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளின் விலை அண்மையில் திருத்தப்பட்டமையால் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விலையில் மாற்றம் செய்யப்படாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வழங்குனர்களுடன் புதிய முறைமைக்கு உடன்பட்டதன் பின்னர், ESPO கச்சா எண்ணெய் இறக்கும் பணி நேற்று (12) இரவு ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி