இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு

தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அதன் முன்னேற்றத்தை அறிக்கையிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று (10) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த முறைப்பாடு மனுவை டிசம்பர் 15-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி