பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சுமார் 7 மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவைப்படுவதாக

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

உணவுப் பாதுகாப்பின்மை, அச்சுறுத்தப்பட்ட வாழ்வாதாரங்கள், முக்கிய மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கவலைகள் ஆகியவற்றால் இணைந்த பல பரிமாண நெருக்கடியை இலங்கை தொடர்ந்து எதிர்கொள்கிறது என அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு இயக்கத்தின்படி, இறக்குமதி பற்றாக்குறை, உயர்ந்து வரும் விலைகள், வாழ்வாதார இடையூறுகள் மற்றும் வீட்டு அளவிலான வாங்கும் திறன் குறைதல் ஆகியவற்றின் விளைவாக கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

6.3 மில்லியன் மக்கள், அல்லது மக்கள்தொகையில் 28 சதவீதம் பேர் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், முறைசாரா வேலைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி