சத்துணவு பொதிகள் வழங்கும் திட்டம் பல மாதங்களாக இடம்பெறவில்லை என கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் தெரிவிக்கின்றனர்.

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் தாம் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவிடம் நியூஸ் ஃபெஸ்ட் வினவியது.

போதிய மானியங்கள் இல்லாததால் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் திட்டம் முடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்தத் திட்டத்தை  மீள ஆரம்பிப்பதற்கான மானியங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இமானியங்கள் இம்மாதத்திற்குள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அதன் பின்னர் உடனடியாக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் செயலாளர் கூறினார். 

இந்த போஷாக்கு திட்டத்தின் கீழ் 55 ஆயிரத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 4500 ரூபா பெறுமதியான சத்துணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி