எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

 

விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் எரிபொருளுக்கான முன்பதிவுகளை வழங்காததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியன தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு இருப்புக்களை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

எனவே, விநியோகஸ்தர்கள் தங்கள் தேவைகளுக்கு முன்பதிவுகளை செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி