இஸ்ரேலிய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெறுகிறது.

 அந்நாட்டில், கடந்த 4 வருடங்களில் நடைபெறும் 5 ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

தற்போதைய பிரதமர் யாயிர் லெபிட் மற்றும் இஸ்ரேலில் நீண்ட காலம் பதவி வகித்த முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது.  120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்த நெப்தலி பென்னட் 61 ஆசனங்களுடன்,. அதாவது ஒரு பெரும்பான்மை ஆசனத்துடன் பிரதமராக பதவியேற்றார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெறுகிறது. அந்நாட்டில், கடந்த 4 வருடங்களில் நடைபெறும் 5 ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

தற்போதைய பிரதமர் யாயிர் லெபிட் மற்றும் இஸ்ரேலில் நீண்ட காலம் பதவி வகித்த முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது.  120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்த நெப்தலி பென்னட் 61 ஆசனங்களுடன்,. அதாவது ஒரு பெரும்பான்மை ஆசனத்துடன் பிரதமராக பதவியேற்றார்.

எனினும், வலதுசாரி லிகுட் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவும் மீண்டும் பிரதமராகுவதற்கு தீவிரமாக முயற்சிக்கிறார். அவர் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குண்டுதுளைக்காத பஸ் ஒன்றிலிருந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய பெஞ்சமின் நெத்தன்யாஹு, நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க தன்னால் முடியும் எனக் கூறினார். 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி