தனியார் பஸ் உரிமையாளர்களினால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு

எதிராக சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரத்தினபுரி டிப்போவின் நடத்துனர் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் தொடர்பில் இன்னும் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என பிரதம செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நடத்துனர் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்த லியனகே, தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் கோரியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இரத்தினபரி டிப்போவில் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சட்டத்தை அமுல்படுத்தாவிட்டால் நாடளாவிய ரீதியில் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி