கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

இதன்படி நாளை (வியாழக்கிழமை) இரவு 10 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு – 02, 03, 04, 05, 07, 08 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி