Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

63 ஆண்டுகளுக்குப் பிறகு முடங்கிய ஹாலிவுட்

T

The Leader Desk

ஜூலை 14, 2023 • 5:00 PM

63 ஆண்டுகளுக்குப் பிறகு முடங்கிய ஹாலிவுட்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • கடந்த 15 ஆண்டுகளில் ஹாலிவுட் திரைப்பட மற்றும் தொலைகாட்சி தொடர் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.
  • இந்த போராட்டத்துக்கு ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள் கூட்டமைப்பும் தற்போது ஆதரவு அளித்துள்ளது.
  • நோலனின் ‘ஒப்பன் ஹெய்மெர்’ படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் வெளியீட்டு விழா லண்டனில் நேற்று (ஜூலை 13) நடைபெற்ற நிலையில், அப்படத்தின் நடிகர்களான சிலியன் மர்ஃபி, ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்டோர் விழாவைப் புறக்கணித்து இந்த போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

ஹாலிவுட் முடங்கியுள்ளது.

ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பளப் பற்றாக்குறை, ஏஐ அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக ‘ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பு கடந்த மே மாத தொடக்கம் முதல் போராடி வருகிறது.

இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்து வருகின்றன. சினிமா மற்றும் தொலைகாட்சி தொடர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கதை எழுதுவதை தடுக்க வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் ஹாலிவுட் திரைப்பட மற்றும் தொலைகாட்சி தொடர் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.

இந்த போராட்டத்துக்கு ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள் கூட்டமைப்பும் தற்போது ஆதரவு அளித்துள்ளது. நோலனின் ‘ஒப்பன் ஹெய்மெர்’ படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் வெளியீட்டு விழா லண்டனில் நேற்று (ஜூலை 13) நடைபெற்ற நிலையில், அப்படத்தின் நடிகர்களான சிலியன் மர்ஃபி, ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்டோர் விழாவைப் புறக்கணித்து இந்த போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனை கிறிஸ்டோபர் நோலன் விழா மேடையிலேயே அறிவித்தார்.

மேலும், முன்னணி நட்சத்திரங்களான மெரில் ஸ்ட்ரீப், ஜெனிஃபர் லாரன்ஸ், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக், ரம மலெக் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஹாலிவுட் துறை கடந்த 63 ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எழுத்தாளர்கள் போராட்டத்தில் நடிகர்களும் இணைந்துள்ளதால் திரைப்படம், வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றின் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...