இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் செயலிழந்திருந்த  WhatsApp மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர்  WhatsApp செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின. 

WhatsApp செயலிழந்து அரை மணித்தியாலத்திற்குள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் அநேகமான பயனாளர்கள் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் 2 பில்லியனுக்கும் அதிகமான WhatsApp பயனாளர்கள் உள்ளனர்.

பிரித்தானியாவில் அதிக பயன்பாடுடைய தகவல் பரிமாற்று செயலியாக WhatsApp உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி