ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 20,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இது நாட்டிற்கு வருகைதரும் சர்வதேச பார்வையாளர்களின் விகிதத்தில் முன்னேற்றத்தைக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இலங்கைக்கு மொத்தமாக 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் முதல் வாரத்தில் (1-7) இலங்கைக்கு 8 ஆயிரத்து 614 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாகவும் இரண்டாவது வாரத்தில் (08-14) முதல் வாரத்தைவிட அதிகமாக 9 ஆயிரத்து 125 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாவது வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் (15-16) சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 ஆயிரத்து 834ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கை சுற்றுலாவுக்கான மிகப்பெரிய மூலச் சந்தையாக இந்தியா உள்ளதாகவும் மொத்த வருகையில் 20 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி