கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான கட்டணத்தை இதுவரை செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 10ஆம் திகதி நாட்டை அண்மித்த இந்த கப்பலில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டு வரப்பட்டது. 

அதற்கமைய, குறித்த கப்பலானது நாட்டை அண்மித்து 32 நாட்களாகின்றன.

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எக்ஸ்ரோ எனப்படும் இந்த மசகு எண்ணெய் ஊடாக டீசல் மற்றும் பெட்ரோலை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, நாட்டை வந்தடைந்த 36,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலுக்கான கட்டணத்தை செலுத்தியதன் பின்னர் பெட்ரோலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி