முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதொச ஊழியர் குழுவை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியமை மூலம் அரசாங்கத்திற்கு 59 இலட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை நட்டம் ஏற்படுத்தியதாக பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு இன்று மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.டி.ஏ.வின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறும், அவர்களின் கைரேகைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதிவாதிகளான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விசாரணையை நவம்பர் 29ஆம் திகதிக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி